![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | மூன்றாம் பாகம் |
செப்டம்பர் 15, 2021 முதல் அக்டோபர் 18, 2021 வரை சிறப்பான முன்னேற்றம் (60 / 100)
குரு மற்றும் சனி பகவான் வக்கிர கதி அடைந்து ஒன்றாக இணைந்து மகர ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான நிவாரணத்தை தருவார்கள். சமீப காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் தற்போது இருக்காது. உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் இலகுவாகும். உங்களுக்கு பிரச்சனை தந்துக் கொண்டிருந்த உடன் வேலை பார்க்கும் ஊழியர் அல்லது மேலாளர் விடுப்பில் செல்வதால் உங்களுக்கு பெரும் அளவு நிவாரணம் கிடைக்கும்.
உங்கள் மனைவி/கணவன் உங்கள் தரப்பு கருத்தை புரிந்து கொள்வார். உங்கள் குழந்தைள் தங்கள் மீது இருக்கும் தவறுகளை உணருவார்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் சுப காரியங்கள் நடத்த முயற்சிக்கலாம். அப்படி இல்லை என்றால் நவம்பர் 2021 வரை காத்திருந்து அதன் பின்னர் சுப காரியங்கள் நடத்தலாம்.
உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். இருப்பினும், முடிந்த வரை கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்த்து விடுவது நல்லது. பங்கு சந்தையில் நீங்கள் பங்குகள் வைத்திருந்தாள் அதன் விலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஆனால் பங்கு சந்தையில் புதிதாக பணத்தை முதலீடு செய்வது நல்ல யோசனையாக இருக்காது.
Prev Topic
Next Topic