![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு பெயருவதால் உங்கள் உத்தியோக வளர்ச்சியில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். குரு உங்கள் வேலை பளு மற்றும் பதற்றத்தை குறைக்க பெரிதும் உதவியாக இருப்பார். உங்களுக்கு நல்ல நிதி சன்மானங்கள் கிடைக்கும். உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு மீண்டும் நல்ல பதவி கிடைக்கும். பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2021 வரை) புது வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் உங்கள் நிறுவனத்தில் இருந்து நீங்கள் விரும்பும் இடத்திற்கு இடமாற்றம், உள்நாட்டு இடமாற்றம், வெளிநாட்டிற்கு குடியேற்றம் போன்ற பலன்களும் எளிதாக கிடைக்கும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் அதிக பிரச்சனைகளை உண்டாக்குவார். கேது உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குறிப்பிடத்தக்க வேலை அழுத்தம் உண்டாக வாய்ப்பு உள்ளது. அதிகரிக்கும் வேலை பளுவால் நீங்கள் அலுவலகத்தில் அதிக நேரம் செலவிட வேண்டிய தேவை ஏற்படலாம். இதனால் உங்களுக்கு தூக்கம் பாதிக்கப்பட்டு, உங்கள் சக்த்தியின் அளவு குறைந்து உங்கள் உடல் நலமும் பாதிக்கப்படலாம். பாகம் 2 மற்றும் 4-இல் அலுவலகத்தில் அரசியல் உண்டாகலாம். உங்களுக்கு கிடைக்கவிருக்கும் பதவி உயர்வு தாமதமாகலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், பாகம் 2 மற்றும் 4-இல் நீங்கள் உங்கள் முக்கியத்துவத்தை இழக்க நேரலாம். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு மிக மோசமாக பாதிக்கப்படலாம்.
மொத்தத்தில் உங்களுக்கு நேரம் எப்போது நன்றாக இருகின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டு பாதுகாப்பாக செயல்பட முயற்சிப்பது நல்ல பலனைத் தரும்.
Prev Topic
Next Topic