![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து ஜனவரி 2௦2௦ முதல் உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கி இருந்திருப்பார். தற்போது குருவும் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு பெயர்ந்து ஏப்ரல் 5, 2௦21 முதல் உங்கள் நிலையை மேலும் மோசமாக்கக் கூடும். உங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவு பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் மிக மோசமாக பாதிக்கப்படலாம். நீங்கள் எந்த முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்னரும், ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் செயல்பட வேண்டும். உங்கள் மனைவி/கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு கடுமையான கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு அவப்பெயரும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆன தம்பதியினர் அதை பிரச்சனைகளை சந்திப்பார்கள், மேலும் அவர்கள் தற்காலிகமாக பிரியவும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் விடயங்கள் பாகம் 2 மற்றும் 4 இல் பெரும் அளவு முன்னேற்றம் பெரும். இதனால் உங்களுக்கு நல்ல நிவாரணமும் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்து விடுவீர்கள். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் உறவில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் சுப காரியங்களையும் நடத்தலாம். எனினும், மே 2௦22 வரை காத்திருந்து பின்னர் முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்கும். ஆனால் ஏப்ரில் 2௦21 முதல் ஏப்ரல் 2௦22 வரை தற்போது நடைபெறும் குரு பெயர்ச்சியால் நீங்கள் அவமானப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
Prev Topic
Next Topic