![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | ஐந்தாம் பாகம் |
நவம்பர் 20, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை சாதிகள், தோல்விகள் மற்றும் ஏமாற்றங்கள் (20 / 100)
குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு பெயர்ந்து முழு சக்த்தியையும் பெறுவார். இது உங்களுக்கு நல்ல செய்தி இல்லை. உங்களுக்கு எதிர்பாராத சாதகமற்ற நிகழ்வுகள் இந்த பாகத்தில் நடக்கலாம். விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கலாம். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும். தோல்விகள், ஏமாற்றங்கள் மற்றும் அவமானங்களால் நீங்கள் மன உளைச்சல் அடையலாம். சுப காரியங்கள் தள்ளிப்போடப்படலாம், அல்லது உங்கள் கட்டுப்பாட்டை மீறி ரத்தாகலாம்.
உங்கள் உத்தியோக வாழ்க்கைக்கு இது ஒரு சவால் நிறைந்த காலகட்டமாக இருக்கும். உங்கள் வேலை பளு மற்றும் வேலைகள் அதிகரிக்கும். உங்களால் 24/7 வேலை பார்த்தாலும், உங்கள் மேலாளரை மகிழ்ச்சி அடையச் செய்ய முடியாது. எந்த பலனும் இன்றி நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்க நேரலாம். சட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மீது தவறான குற்றம் சாட்டப்பட்டு நீங்கள் குற்றவாளியாகலாம். முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. விசா மற்றும் குடியேற்றம் போன்ற எந்த பலனையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. யாரிடமும் இருந்து பணம் கடன் வாங்குவதோ அல்லது யாருக்கும் பணம் கடன் தருவதையோ முடிந்த வரை தவிர்த்து விடுவது நல்லது. பங்கு சந்தை வர்த்தகம் இந்த பாகத்தில் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு நீங்கள் இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic