![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் நிதி வளர்ச்சி அதிகரிக்கும் செலவுகளால் மிக மோசமாக பாதிக்கக் கூடும். உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணம் விரைவாக கரையலாம். ஏப்ரல் 2௦22 வரை நீங்கள் மோசமான பாகத்தை கடக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். அதிகப்படியான தேவையற்ற மற்றும் எதிர்பாராத மருத்துவ மற்றும் பயண செலவுகள் ஏற்படலாம். நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்க அதிகப்பனத்தை செலவு செய்வீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வங்கியில் கடன் வாங்க பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் நீங்கள் சுருட்டி கொடுக்க நினைத்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால் பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் விடயங்களில் சற்று முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் உங்கள் கடனை விரைவாக அடைக்கத் தொடங்குவீர்கள். உங்கள் வங்கிக் கடன் இந்த காலகட்டத்தில் ஒப்புதல் பெரும். நீங்கள் புதிதாக வீடு வாங்குவது அல்லது சொத்துக்களில் முதலீடு செய்ய நினைத்தால், அதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
மொத்தத்தில், ஏப்ரல் 2௦21 முதல் ஏப்ரல் 2௦22 வரை நீங்கள் இந்த ஆண்டு முழுவதும் அதிக இழப்புகளை சந்திக்க நேரலாம். பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் உங்களுக்கு கிடைக்கும் நிவாரணம் நல்ல பலனையே கொண்டு வரும் என்று யூகித்துக் கொள்ளாதீர்கள். பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் உங்கள் நிதி பிரச்சனையை குறைந்தாலும், அது அதிகப்படியான அதிர்ஷ்டமாக இருக்காது.
Prev Topic
Next Topic