குரு பெயர்ச்சி (2021 - 2022) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

அக்டோபர் 18, 2021 முதல் நவம்பர் 20, 2021 வரை குறிகிய கால அதிர்ஷ்டம் (85 / 100)


இந்த குரு பெயர்சியிலேயே இது ஒரு சிறப்பான காலகட்டமாகும். குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைந்து சனி பகவானின் தாக்கத்தை இல்லாமல் செய்வார். இந்த் இணைந்த சஞ்சாரம் உங்களுக்கு நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்கி கொடுக்கும். இது குரு மற்றும் சனி பகவான் இணைந்து சஞ்சரிக்கும் இறுதி சஞ்சாரமாகும். இப்படி ஒரு இணைந்த சஞ்சாரத்தை அடுத்தது 18 ஆண்டுகளுக்கு பிறகே மீண்டும் காண முடியும்.
கடந்த பாகத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளில் ஒரு முடிவுக்கு வரும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிப்பதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். சமுதாயத்தில் நீங்கள் நல்ல பெயரையும், புகழையும் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால், அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.



உங்கள் அலுவலகத்தில் நீங்கள் நல்ல பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களுக்கு அடுத்த நிலைக்கு நல்ல பதவி உயர்வும், சிறப்பான சம்பள உயர்வும் கிடைக்கும். மேலும் உங்களுக்கு இந்த பாக காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும். தொழிலதிபர்கள் சிறப்பான லாபத்தை காண்பார்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். பங்கு சந்தை வர்த்தகத்தில் நீங்கள் விண்ணைத் தொடும் லாபத்தை காண்பீர்கள். ஆனால் உங்களுக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம் 5 – 6 வாரங்கள் மட்டுமே இருக்கும் ஒரு குறுகிய கால அதிர்ஷ்டமாகும். இந்த காலகட்டத்தில் நீங்கள் விரைந்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.




Prev Topic

Next Topic