![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) உடல்நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | உடல்நலம் |
உடல்நலம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
இந்த அஷ்டம குருவின் தொடக்கத்தில் உங்களுக்கு அதிக உடல் உபாதைகளும், மன அழுத்தங்களும் ஏற்படலாம். உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர்களின் உடல் நாளும் பாதிக்கப்படலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் பெற்றோர்களுக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். அதனை உங்களால் மருத்துவ காப்பீட்டால் ஈடு செய்ய முடியாமல் போகலாம். உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இந்த காலகட்டத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் மது, புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களுக்கு உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், அடிமையாகும் வாய்ப்பு உள்ளது. பாகம் 1 மற்றும் பாகம் 5இல் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
குரு பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் நல்ல நிலையில் சஞ்சரிப்பார். உங்கள் உடல் நலத்தை அதிகரித்துக் கொள்ள நீங்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனாலும், சரியான மருந்து கிடைத்து விரைவில் குணமடைவீர்கள். உங்கள் உடல் உபாதைகள் குறையும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு, ஆதித்திய ஹிருதயம் கேட்டு வந்தால், சற்று ஆறுதலாக இருக்கும்.
Prev Topic
Next Topic