குரு பெயர்ச்சி (2021 - 2022) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

காதல்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், சனி பகவான் 7ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்கள் காதல் வாழ்க்கையை மிகவும் மோசமாக பாதிப்பார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில், குறிப்பாக ஏப்ரல் 2௦21 முதல் ஏப்ரல் 2௦22 வரை அதிகமாக பாதிக்கப்படலாம். மேலும் பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் நீங்கள் காதலிப்பவரை விட்டு பிரியவும் வாய்ப்பு உள்ளது.


முடிந்த வரை நீங்கள் புதிதாக உறவை தொடங்கும் முயற்சியை தவிர்த்து விடுவது நல்லது. சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் தவறான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் சில முன்னேற்றங்கள் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் ஏற்படலாம். பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணத்தை நீங்கள் செய்து கொள்ள இது தான் நேரம். திருமணம் ஆன தம்பதியினர் தங்களுக்குள் ஏற்பட்ட சில கருத்துவேறுபாடுகளை புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கையை ஒன்றாக நடத்தத் தொடங்குவார்கள். நீங்கள் குழந்தை பேறுக்காக திட்டமிட இருந்தால், அதற்கு முன் உங்கள் பிறந்த சாதக பலனை நீங்கள் பார்க்க வேண்டும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரனை கண்டறிந்து நீங்கள் திருமணமும் செய்து கொள்வீர்கள்.

Prev Topic

Next Topic