![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் – கடக ராசி
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் நவம்பர் 2௦2௦ முதல் சஞ்சரித்து உங்களுக்கு இது வரை நல்ல பலன்களைத் தந்திருப்பார். எதிர்பாராவிதமாக, குரு தற்போது உங்கள் ராசியின் 8ஆம் வீடான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ந்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களை உண்டாக்கலாம். இதனால் உங்கள் வாழ்க்கையில் இது ஒரு மோசமாக பாகமாக இருக்கலாம்.
உங்களுக்கு எதிரான சாதிகள் மற்றும் அரசியலால், நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும், நீங்கள் குற்றம்சட்டப்படலாம். பண இழப்பும், உத்தியோக இழப்பும் ஏற்படலாம். உங்கள் பிரச்சனைகள் குறிப்பாக பாகம் 1 (ஏப்ரல் 5, 2௦21 முதல் ஜூன் 2௦, 2௦21 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦21 முதல் ஏப்ரல் 2௦22 வரை) உங்கள் கட்டுபாட்டை மீறி போகலாம். சுப காரியங்கள் நடத்த இது ஏற்ற நேரமாகவும் இருக்காது.
ஆனால் பாகம் 2 (ஜூன் 2௦, 2௦21 முதல் செப்டம்பர் 15, 2௦21 வரை) மற்றும் பாகம் 4 (அக்டோபர் 8, 2௦21 முதல் நவம்பர் 2௦, 2௦21 வரை) உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் இந்த காலகட்டத்தில் பெரும் அளவு குறையும். நீங்கள் உங்கள் மகா தசை சாதகமாக இருக்கும் வரையில் சுப காரியங்கள் நடத்த முயற்சிக்கலாம்.
இந்த ஆண்டை நான் 5 பாகங்களாக பிரித்து பலன்களை எழுதி உள்ளேன். இந்த பாகம் 2 மற்றும் 4 ஐ பயன்படுத்தி நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம். மேலும் பாகம் 1, 3, மற்றும் 5 இல் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு உங்கள் சோதனை காலத்தை நீங்கள் கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic