குரு பெயர்ச்சி (2021 - 2022) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

Jun 20, 2021 to Sep 15, 2021 Excellent Recovery (65 / 100)


குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்தும், ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்தும் உங்களுக்கு இந்த பாக காலகட்டத்தில் சிறப்பனா முன்னேற்றத்தை தருவார்கள். இந்த சஞ்சாரம் உங்களுக்கு சனி பகவானால் ஏற்படும் தாக்கங்களை குறைக்க உதவும். உங்களுக்கு விரைவாக நல்ல திருப்புமுனை ஏற்படும். உங்கள் குடும்பம் மற்றும் அலுவலகத்தில் அதிகப்படியான நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். உங்களுக்கு நல்ல பலன்கள் இதனால் கிடைக்கத் தொடங்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தை நீங்கள் மீண்டும் பெறுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கையின் அளவு அதிகரிக்கும். இந்த பாகத்தில் நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.
நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால், உங்களுக்கு தற்காலிகமாக வேலை நல்ல சம்பளத்தோடு கிடைக்கும். ஆனால் உங்கள் புது நிறுவனத்திடம் அதிக சம்பளத்திற்கு பேச வேண்டாம், இதனால் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு தவறிப் போகலாம். விசா மற்றும் குடியேற்றம் குறித்த பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். ஆனால் உங்களுக்கு கிடைக்கும் இந்த நிவாரணம் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பங்கு சந்தை வர்த்தகம் மற்றும் புதிய முதலீடுகள் போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் பிறந்த சாதகத்தின் பலத்தை நீங்கள் பார்த்து மேலும் நற்பலனை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic