குரு பெயர்ச்சி (2021 - 2022) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

Sep 15, 2021 to Oct 18, 2021 Mixed Results (50 / 100)


குரு மீண்டும் பின்னோக்கி பெயர்ந்து சனி பகவானோடு மகர ராசியில் சஞ்சரிப்பார். குரு மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு கலவையான பலன்கள் உண்டாகும். உங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குடும்ப வாழ்க்கை சிறு வாக்குவாதங்கள் மற்றும் கருத்துவேருபாடுகளால் சற்று பாதிக்கப்படலாம். ஆனால் விடயங்கள் மோசமாகாது.
உங்கள் அலுவலக வாழ்க்கை சற்று மந்தமாக இருக்கும். நீங்கள் மிதமான வேலை சுமையை காண்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது புது வேலை வாய்ப்பு போன்ற பலன்கள் பெற உங்கள் பிறந்த சாதகத்தின் பலம் இருக்க வேண்டும். தொழிலதிபர்கள் ஒரு தேக்க நிலையை இந்த காலகட்டத்தில் சந்திப்பார்கள். பயணம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். பங்கு சந்தை வர்த்தகம் எந்த நல்ல அதிர்ஷ்டத்தையும் தராது. நீங்கள் வளர்ச்சியை எதிர்பார்கின்றீர்கள் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலம் இருக்க வேண்டும்.


Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com


Prev Topic

Next Topic