![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
குரு முன்னும் பின்னுமாக பெயருவதால் தற்போது நிகழும் இந்த குரு பெயர்ச்சி காலத்தில், அதாவது ஏப்ரல் 2௦21 முதல் ஏப்ரல் 2௦22 வரை உங்கள் அதிர்ஷ்டத்தில் சில சமயங்கலில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படலாம். சாதகமற்ற சனி பகவான் மற்றும் கேதுவின் பெயர்ச்சியால் உங்களுக்கு எதிர்மறை சக்திகள் அதிகமாக இருக்கும். மேலும் இந்த பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் நீங்கள் எதிர்பாராத பின்னடைவுகளை சந்திப்பீர்கள்.
உங்கள் நிர்வாகத்தின் பக்கம் இருந்து உங்களுக்கு எதிராக அதிகப்படியான அரசியல் உண்டாகும். நீங்கள் பதவி உயர்வை எதிர்பார்கின்றீர்கள் என்றால், அது உங்களுக்கு எதிரான சதிகளால் தாமதமாகலாம். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு கிடைக்கும் விரைவான வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு உங்கள் மீது பொறாமைப் பட்டு, உங்களுக்கு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். நீங்கள் சரியான நேரத்தில் ப்ரோஜெக்ட்டை முடிக்க வேண்டும் என்றால், கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் முதலாளியிடம் உங்களுக்கு கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்க நேரலாம், அல்லது குறைந்த நிலைக்கு பதவி இறக்கம் ஏற்படலாம், அல்லது உங்களை விட தகுதி குறைந்தவர் உங்களுக்கு மேல் நிலைக்கு பதவி உயர்வைப் பெறலாம்.
குரு பின் பெயர்ந்து உங்கள் ராசியின் 7ஆம் வீடான களத்திற ஸ்தானத்தில் பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் சஞ்சரிக்கும் போது உங்களுக்கு நல்ல பலன்கள் உடாகத் தொடங்கும். உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் குறையும். நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள், ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு நலல் சம்பளத்தோடு கிடைக்கும், ஆனால் பெரிய அளவில் நீங்கள் பதவியை எதிர் பார்க்க முடியாது. உங்கள் குடியேற்றம் மற்றும் இடமாற்ற பலன்கள் பெரும் விடயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
Prev Topic
Next Topic