![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
இந்நேரம் நீங்கள் உங்கள் தொழிலில் இழப்புகளை சந்தித்திருந்திருப்பீர்கள். இது குறிப்பாக சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்ததால் ஏற்பட்டிருக்கும். தற்போது குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை உங்கள் நிதி நிலையில் உண்டாக்குவார். உங்களுக்கு வரும் நாட்களில் பெரும் ஆளவு வெற்றி உங்கள் தொழிலில் கிடைக்கும்.
இருப்பினும், நீங்கள் இன்னும் ஜென்ம சனி காலத்தில் தான் இந்த குரு பெயர்ச்சி காலம் முழுவதும் இருப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்களுக்கு கிடைக்கும் நிவாரணத்தின் வேகமும், வளர்ச்சியின் அளவும் உங்கள் பிறந்த சாதகத்தை பொறுத்தே உள்ளது. உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை) உள்ள காலகட்டத்தில் உங்களால் எளிதாக உங்கள் நிதி தேவைகளை சமாளித்து விட முடியும். நீங்கள் உங்கள் போட்டியாளர்களால் ஏற்படும் அழுத்தத்தை எளிதாக சமாளித்து விடுவீர்கள். சுய தொழில் புரிவோரோகள் மற்றும் கமிஷம் ஏஜெண்டுகள் சிறப்பாக செயல்படுவார்கள்.
ஆனால் ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை உள்ள காலகட்டத்தில் உங்களுக்கு சிக்கல்களும், ஏமாற்றங்களும், பிரச்சனைகளும் ஏற்படலாம். உங்கள் பண வரத்து பாதிக்கப்படும். சனி பகவான் மற்றும் ராகு உங்கள் தொழிலில் அதிக போட்டிகளை உண்டாக்குவார்கள். நீங்கள் உங்கள் போட்டியாளர்கள் மற்றும் மறைமுக எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் சதிகளால் உங்களுக்கு கிடைத்த நல்ல ப்ரோஜெக்ட்டை இழக்க நேரலாம். உங்கள் தொழிலை விரிவுபடுத்த முயற்சிப்பது இப்போது நல்ல யோசனையாக இருக்காது. நீங்கள் இந்த பாகத்தில் உங்கள் நிர்வாக செலவுகளை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்.
Prev Topic
Next Topic