![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | ஐந்தாம் பாகம் |
நவம்பர் 20, 2021 முதல் ஏப்ரல் 13, 2021 வரை நல்ல மாற்றங்கள் (75 / 100)
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், கேது 11ஆம் வீட்டிலும் சஞ்சரித்து கடந்த பாகத்தில் உங்களுக்கு வலி மிகுந்த சம்பவங்களை உண்டாக்கி இருந்திருப்பார்கள். சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். இருப்பினும், குரு உங்களுக்கு நல்ல நிவாரணத்தை தந்து உங்கள் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வைத் தருவார். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்களிடம் இருந்து உங்களுக்கு நல்ல உதவிகள் கிடைக்கும். நீங்கள் இந்த காலகட்டத்தில் சுப காரியங்கள் செய்யலாம். ஆனால் சுப காரியங்கள் நடத்தும் போது உங்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
உங்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்கும், ஆனாலும், உங்கள் உழைப்பிற்கு ஏற்ற சன்மானும் உங்களுக்கு கிடைக்கும். இதனால் நீங்கள் கடன் பிரச்சனைகளில் இருந்து வெளி வர நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் புது வீடு வாங்கி குடி பெயர முயற்சி செய்யலாம். தொலைதூர பயணம் இந்த பாகத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். குடியேற்றம் மற்றும் விசா குறித்த விடயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். சனி பகவான், ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சாரிக்காததால் நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தை முற்றிலுமாக தவிர்த்து விட முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic