![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | முதல் பாகம் |
ஏப்ரல் 05, 2021 முதல் ஜூன் 20, 2021 வரை நல்ல பலன்கள் (80 / 100)
ஜென்ம குரு மற்றும் ஜென்ம சனியால் நவம்பர் 202௦ முதல் நீங்கள் மோசமான காலகட்டத்தை சந்தித்திருந்திருப்பீர்கள். இப்போது குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 5, 2021 அன்று பெயர்ந்து உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சரிவுகளுக்கு ஒரு இடைவேளை தருவார். உங்கள் உடல் நல பிரச்சனையின் மூலக் காரனத்தை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். உங்கள் மருத்துவ செலவுகளை மருத்துவ காப்பீடு மூலம் ஈடு செய்து கொள்வீர்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வதில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள் மற்றும் உறவினர்களிடம் இருந்து உங்களுக்கு நல்ல உதவி கிடைக்கும். நீங்கள் இந்த பாக காலகட்டத்தில் சுப காரியங்கள் நிகழ்த்தலாம். ஆனால், குழந்தை பேருக்கு திட்டமிட வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் சிறப்பாக இருக்க வேண்டும்.
உங்கள் வேலை பளு குறையும். நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால், இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். சம்பளம் மற்றும் பதவி குறைவாக இருந்தாலும், நல்ல வளர்ச்சி இருக்கும். தொழிலதிபர்கள் சில நிவாரணத்தை காண்பார்கள். சுய தொழில் புரிவோர்கள் தங்களுக்கு கிடைக்கும் சன்மானன்களால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். நீங்கள் ஜென்ம சனி காலத்தில் இருப்பதால் உங்களுக்கு தொடர்ந்து அழுத்தமும், பதற்றமும் ஏற்படும். இந்த காலகட்டத்தை பயன்படுத்தி நீங்கள் அதிக சக்திகளை சேகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic