![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | Overview |
Overview
2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் - மகர ராசி
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
உங்களுக்கு ஜனவரி 2020 முதல் ஜென்ம சனி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. சனி பகவான் உங்களுக்கு ஜென்ம ராசியில் இருந்து ஜனவரி 2023 வரை பிரச்சனைகளை தந்துக் கொண்டிருப்பார். குருவும் தற்போது உங்கள் ஜென்ம ராசியில் நவம்பர் 202௦ முதல் சஞ்சரித்துக் கொண்டிருப்பார். இதனால் உங்கள் வாழ்க்கையில் நவம்பர் 202௦ முதல் அதிக பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடந்த சமீப காலத்தில் சுனாமி போன்ற மோசமான பாதிப்புகளை சந்தித்திருந்திருப்பீர்கள்.
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 5, 2021 அன்று பெயர்ந்து உங்களுக்கு நல்ல பலனை கொண்டு வருவார். ஜென்ம சனியின் தாக்கம் சாதகமான குரு பெயர்ச்சியால் குறையும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை மீண்டும் பெறுவீர்கள். பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் சுப காரியங்கள் நடத்துவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிலுவையில் இருக்கும் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும்.
இருப்பினும், குரு முன்னும் பின்னுமாக பெயர்ந்து உங்கள் அதிர்ஷ்டத்தை பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் பாதிப்பார். நீங்கள் கவனமாக இல்லை என்றால், உங்களுக்கு பண இழப்பும், அவப்பெயரும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் எதை செய்தாலும், அதில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், பாகம் 2 மற்றும் பாகம் 4 உங்கள் மகா தசையின் பலத்தை பார்த்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும். உங்கள் நேரம் எப்போது நன்றாக உள்ளது என்பதை கண்டறிந்து நீங்கள் பாதுகாப்பாக செயல்பட வேண்டும். நீங்கள் மூச்சு பயிற்சி செய்து விஷ்ணு சஹாசர நாமம் கேட்டு உங்கள் நேர்மறை சக்த்தியை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
Prev Topic
Next Topic