குரு பெயர்ச்சி (2021 - 2022) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

ஜூன் 20, 2021 முதல் செப்டம்பர் 15, 2021 வரை எதிர்பாராத பின்னடைவுகள் (30 / 100)



கடந்த பாகத்தில் உங்களுக்கு கிடைத்த சிறிய அதிர்ஷ்டம் தற்போது முடிவுக்கு வரும். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் வக்கிர கதி அடைகிறார். இதனால் சில பிரச்சனைகள் உங்கள் குடும்பத்தில் எட்டிப் பார்க்கும். உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் நீங்கள் சுப காரியங்கள் நடத்த முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்காது. திருமணம் ஆன தம்பதியினர் சிறு கருத்துவேறுபாடுகளை சந்திப்பார்கள். நீங்கள் உங்கள் பிறந்த சாதக பலனை சார்ந்தே குழந்தை பேறுக்கு திட்டமிட வேண்டும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஏற்ற வரனை காண்பது கடினமாக இருக்கும்.



உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் அதிகரிக்கும். நீங்கள் கடினமாக உழைத்து உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை முடிக்க முயற்சி செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியலை சமாளித்து விடுவீர்கள் என்பது தான். ஆனால் உங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தாமதமாகலாம். அதிக செலவுகள் இருப்பதால், உங்களால் பணத்தை சேமிக்க முடியாமல் போகலாம். வங்கிக் கடன் ஒப்புதல் பெற அதிக நேரம் ஆகலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் பங்கு சந்தை வர்தகத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது.



Prev Topic

Next Topic