![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் இடமாற்றம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் இடமாற்றம் |
பயணம், வெளிநாட்டு பயணம் மற்றும் இடமாற்றம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயருவதால் பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை) நல்ல பலன்களை காண்பீர்கள். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் இந்த காலகட்டத்தில் ஒப்புதல் பெரும். நீங்கள் ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் நிரந்தர குடியுரிமைப் பெற விண்ணப்பிக்கலாம் . இந்த காலகட்டத்தை பயன்படுத்தி நீங்கள் விசா ஸ்டம்பிங் செய்ய உங்கள் தாய்நாடு திரும்ப முயற்சிக்கலாம்.
ஆனால் சனி பகவான் உங்கள் ராசியின் 1ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், நீங்கள் பயணத்தின் போது, குறிப்பாக ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் அதிக தனிமையையும், ஏமாற்றங்களையும் சந்திப்பீர்கள். உங்கள் பயண செலவுகள் சரியான தங்கும் வசதி கிடைக்காததால், அதிகரிக்கலாம். மேலும் வெளிநாட்டில் உங்களுக்கு போதிய உதவிகள் கிடைக்காமல் நீங்கள் இன்னல்களை சந்திக்கலாம். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் கிடைக்கும் விடயங்கள் இந்த காலகட்டத்தில் தேக்க நிலை அடையலாம். மொத்தத்தில் நீங்கள் முடிந்த வரை ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை இருக்கும் காலகட்டத்தில் பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.
Prev Topic
Next Topic