குரு பெயர்ச்சி (2021 - 2022) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

வேலை / உத்தியோகம்



Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021


பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

ஜென்ம குரு மற்றும் ஜென்ம சனி உங்களுக்கு அதிக ஏமாற்றங்கள், தடைகள் மற்றும் அவமானங்களை உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு உண்டாக்கி இருந்திருப்பார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் உத்தியோகத்தையும் இழந்திருப்பீர்கள்.

தற்போது குரு ஏப்ரல் 5, 2021 அன்று உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு பெயர்ந்து வரும் நாட்களில் உங்களுக்கு நல்ல உதவிகளை செய்வார். உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் பெரும் அளவு குறையும். உங்களுக்கு சிறப்பான நிதி சன்மானங்கள் கிடைக்கும். நீங்கள் அலுவலகத்தில் உங்கள் நான் மதிப்பை மீண்டும் பெறுவீர்கள். பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2021 வரை) நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்யலாம். நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், உள்நாட்டிலேயே இடமாற்றம் மற்றும் குடியேற்ற பலன்கள் போன்றவற்றை உங்கள் நிறுவனத்தில் இருந்து எளிதாக பெறுவீர்கள்.


ஜென்ம சனியின் தாக்கம் ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை அதிகமாக உணரப்படும். உங்களுக்கு வேலை பளு ஓரளவு இருக்கும். அலுவலகத்தில் அதிகரிக்கும் வேலை பளுவால், நீங்கள் அதிக நேரத்தை அலுவலகத்தில் செலவிடுவீர்கள். இதனால் உங்களுக்கு போதிய தூக்கம் இல்லாமல் மற்றும் உங்கள் சக்த்தியின் அளவும் குறைந்து உங்கள் உடல் நலம் பாதிக்கக் கூடும். அலுவலகத்தில் பாகம் 2 மற்றும் 4 இல் அரசியல் ஏறப்டலாம். உங்கள் பதவி உயர்வு தாமதமாகலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் உங்கள் முக்கியத்துவத்தை அலுவலகத்தில் இழக்க நேரலாம். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு மிக மோசமாக பாதிக்கப்படலாம்.

மொத்தத்தில் உங்களுக்கு நேரம் எப்போது நன்றாக உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு நீங்கள் பாதுகாப்பாக செயல்பட முயற்சிக்க வேண்டும்.

Prev Topic

Next Topic