![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் கடந்த சமீப காலத்தில் சஞ்சரித்ததால் நீங்கள் மிகவும் மோசமான காலகட்டத்தை சந்தித்திருந்திருப்பீர்கள். இப்போது குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயருவதால் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் நீங்கள் சமாளிக்க உங்களுக்கு பெரும் அளவு உதவிகள் கிடைக்கும். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் குடும்ப சூழல் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும். ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை – பாகம் 1 மற்றும் நவம்பர் 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை பாகம் 5 இல் நீங்கள் சுப காரியங்கள் நடத்துவதில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டங்களில் தேவை இல்லாத சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் போன்ற பிரச்சனைகளை உங்கள் குடும்பத்தில் உண்டாக்குவார். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பாகம் 4 அக்டோபர் 18, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் தற்காலிகமாக உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிய நேரலாம். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு நகர முயற்சிக்கும் முன் உங்கள் நேரம் எப்போது சிறப்பாக உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
Prev Topic
Next Topic