![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (ஐந்தாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | ஐந்தாம் பாகம் |
நவம்பர் 20, 2021 முதல் டிசம்பர் 31, 2021 வரை சிறப்பான வளார்ச்சி மற்றும் வெற்றி (80 / 100)
இறுதியாக, குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். இருப்பினும், சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் தான் இந்த பாகத்திலும் சஞ்சரிப்பார். சனி பகவான் உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கினாலும், குரு மற்றும் ராகு உங்களுக்கு பாதுகாப்பை தந்து நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவார்கள். நீங்கள் கடந்த பாகத்தில் (பாகம் 4 – அக்டோபர் 18, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை) சுனாமி போன்ற பாதிப்புகளை சந்தித்திருந்தாலும், இந்த பாகத்தில் நீங்கள் நல்ல திருப்பு முனையை காண்பீர்கள். உங்களுக்கு நல்ல சக்தி கிடைத்து கடந்த வலி மிகுந்த சம்பவங்களில் இருந்து வெளி வருவீர்கள்.
உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்து விடுவீர்கள். உங்களுக்கு உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்களிடம் இருந்து நல்ல உதவிகள் கிடைக்கும். சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற நேரம். உங்கள் குழந்தைகள் தங்கள் தவறை உணர்ந்து உங்கள் பேச்சை கேட்கத் தொடங்குவார்கள். நீங்கள் இழந்த புகழையும், செல்வாக்கையும் இந்த பாகத்தில் மீண்டும் பெறத் தொடங்குவீர்கள்.
குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் நீங்கள் உங்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். நீண்ட காலமாக நீங்கள் காத்திருந்த பதவி உயர்வு தற்போது உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு சிறப்பான நிதி சன்மானங்கள் கிடைக்கும். இதனால் நீங்கள் உங்கள் நிதி பிரச்சனைகளை சரி செய்து விடுவீர்கள். நீண்ட தூர பயணம் உங்களுக்கு இந்த பாக காலகட்டத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை தரும். புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற நேர்மை. பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். ஆனால் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் மற்றும் ஆப்சன் வர்த்தகத்தை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது. ஏனென்றால், அஷ்டம சனி நடபதாலும், உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தாலும், உங்களுக்கு இழப்புகள் ஏற்படலாம்.
Prev Topic
Next Topic