![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | முதல் பாகம் |
ஏப்ரல் 05, 2021 முதல் ஜூன் 20, 2021 நல்ல அதிர்ஷ்டம் (85 / 100)
அஷ்டம சனி மற்றும் அஷ்டம குருவால் நீங்கள் கடந்த சில மாதங்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டிருப்பீர்கள். சமீப கடந்த காலத்தில் உங்கள் வலியை பற்றி விவரிக்க எந்த வார்த்தைகளும் இருக்காது. இப்போது, குரு உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு பெயருவதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ராகு மற்றும் கேது பெயர்ச்சியும் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். அஷ்டம சனியின் தாக்கம் இந்த பாகத்தில் பெரும் அளவு குறையும். உங்களுக்கு ஏற்பட்ட வலி மிகுந்த சம்பவங்களில் இருந்து நீங்கள் வெளி வந்து விடுவீர்கள். நீங்கள் உங்கள் மனோ பலத்தை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வீர்கள். இந்த் குறுகிய காலத்தில் நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த திட்டமிடலாம். திருமணம் ஆன தம்பதியினர்களுக்கிடையே நல்ல மகிழ்ச்சியான உறவு உண்டாகும்.
நீங்கள் உங்கள் உத்யோகத்தை இழந்திருந்தால், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் மீண்டும் நல்ல பலத்தோடு திரும்பி வருவார்கள். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் உண்டாகும். உங்கள் கடன்களை நீங்கள் விரைவாக அடைத்து விடுவீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம்.
பயணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். நிலுவையில் இருக்கும் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். ஆனால் ஸ்பெகுலேடிவ் வர்த்தகத்தை முடிந்த வரை தவிர்த்து விடுவது நல்லது. ஜுன் 2௦, 2021 முதல் நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள்.
Prev Topic
Next Topic