![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | காதல் |
காதல்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
கடந்த சில மாதங்கள் காதலர்கள் வலி மிகுந்த சம்பவங்களை சந்தித்து இருந்திருப்பார்கள். நவம்பர் 202௦ முதல் மார்ச் 2021 வரை நீங்கள் அதிகப்படியான மன உளைச்சலை சந்தித்திருந்திருப்பீர்கள். ஏப்ரல் 5, 2021 அன்று குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயர்ந்த பிறகு நீங்கள் மோசமான காலகட்டத்தை விட்டு வெளியில் வருகுரீர்கள். நீங்கள் காதலிப்பவரை விட்டு பிரிந்து இருந்தால், பாகம் 1 இல் மீண்டும் அவருடன் சேர வாய்ப்பு உள்ளது.
குடும்ப பிரச்சனைகளை சரி செய்வதால் உங்கள் காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியத்தோடு இருப்பார்கள். ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦,. 2021 வரை பாகம் 1 மற்றும் நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2021 வரை பாகம் 5 ஆகிய காலகட்டங்களில் நீங்கள் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கலாம். நீங்கள் அதிகம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்திற்கே ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், 1 மற்றும் பாகம் 5 இல் உங்களுக்கு ஏற்ற வரன் கிடைக்கும்.
பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் உங்களுக்கு தேவை இல்லாத பயமும், பதற்றமும் உண்டாகலாம். நீங்கள் காதலிப்பவருடன் உங்களுக்கு தேவையற்ற சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்கள் காதல் விடயங்களால் உங்கள் குடும்பத்தில் இரு தரப்பு குடும்பத்தினர்கள் இடையிலும் சண்டைகள் ஏற்படலாம். திருமணம் ஆன தம்பதியினர் அதிக சவால்களை இந்த காலகட்டத்தில் சந்திப்பார்கள். குரு முன்னும் பின்னுமாக விரைவாக நகருவதால், நீங்கள் குழந்தை பேருக்கு திட்டமிட எண்ணினால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் சிறப்பாக இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic