குரு பெயர்ச்சி (2021 - 2022) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

கண்ணோட்டம்


2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி

Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021


பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் “அஷ்டம குரு”-வாக சஞ்சரித்து நவம்பர் 2020 முதல் உங்கள் வாழ்க்கையை மிகவும் பாதித்திருந்திருப்பார். கடந்த இந்த சமீப மாதங்களில் நீங்கள் சுனாமி போன்ற சாதகமற்ற நிகழ்வுகளை உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருந்திருப்பீர்கள்.


குரு உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு பெயர்ந்து உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். அஷ்டம சனியின் தாக்கம் சாதகமான குரு பெயர்ச்சியால் குறையும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை மீண்டும் பெறுவீர்கள். சுப காரியங்கள் நடத்துவதில், குறிப்பாக பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிலுவையில் இருக்கும் உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும்.
இருப்பினும், குரு முன்னும் பின்னுமாக பெயருவதால் உங்கள் அதிர்ஷ்டம், குறிப்பாக பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் பாதிக்கப்படலாம். நீங்கள் கவனமாக இல்லை என்றால், பெரும் அளவு பணத்தை இழப்பதோடு, உங்களுக்கு அவப்பெயரும் ஏற்படலாம். நீங்கள் எதை செய்தாலும், அதில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு உங்களது தற்போதைய மகா தசை எவ்வளவு பலமாக இந்த பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் நேரம் எப்போது சிறப்பாக உள்ளது என்று உங்களுக்குத் தெரிந்தால், அதற்கேற்றவாறு நீங்கள் பாதுகாப்பாக செயல்படலாம். நீங்கள் மூச்சு பயிற்சி செய்து, விஷ்ணு சஹாசர நாமம் கேட்டு வந்தால், நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ளலாம்.

Prev Topic

Next Topic