குரு பெயர்ச்சி (2021 - 2022) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

செப்டம்பர் 15, 2021 முதல் அக்டோபர் 18, 2021 வரை மிதமான முன்னேற்றம் (55 / 100)



குரு மீண்டும் பின்னோக்கி பெயர்ந்து சனி பகவானோடு இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். இரண்டு கிரகங்களும் வக்கிர கதி அடைவதால், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள். உங்கள் உடல் நலத்தை மீண்டும் பெறுவீர்கள். இது 5 வாரங்களுக்கு மட்டுமே இருக்கக் கூடிய ஒரு குறுகிய காலகட்டம் என்பதால், நீங்கள் நல்ல மாற்றங்களை கவனித்தாலும், அது சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும். இதனாலேயே, இந்த பாக காலகட்டத்தில் திருமண முயற்சிகளை தவிர்த்து விடுவது நல்லது. அப்படியே நீங்கள் திருமணம் நிச்சயிக்கும் விடயத்தில் வெற்றி பெற்றாலும், அடத்த பாகத்தில் அதனால் அதிக பிரச்சனைகள் ஏற்படலாம், ஏமலும் இதனால் உங்களுக்கு அவமானங்களும் ஏற்படலாம்.


உங்கள் வேலை பளு சுமாராக இருக்கும். எந்த வளர்ச்சியையும் இப்போது நீங்கள் எதிர்பார்க்க கூடாது. இந்த பாக காலகட்டத்தை பயன்படுத்தி நீங்கள் நேர்மறை சக்த்திகளை அதிகரித்துக் கொண்டு உங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தலாம். நீங்கள் நேர்காணலில் பங்கு பெற்றால், உங்களுக்கு கிடைக்கவிருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். அப்படியே நீங்கள் நேர்காணலை நல்லபடியாக முடித்து விட்டாலும், உங்களுக்கு பின்புலன் விசாரணை மற்றும் விசா மாற்றம் போன்ற விடயங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். தொழிலதிபர்கள் தங்கள் லாபத்தை பணமாக்கி அதனை பாதுகாப்பான முதலீடுகளில் போடுவது நல்லது.

இந்த 5 வாரங்களில் உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால் அதற்கு பிறகு எதிர்பாராத பின்னடைவுகளும் ஏற்படலாம். பங்கு சந்தை வர்த்தகத்தையும், ரியல் எஸ்டேட் முதலீடுகளையும் முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது.



Prev Topic

Next Topic