குரு பெயர்ச்சி (2021 - 2022) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து பங்கு சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். உங்களால் குறிப்பிடத்தக்க லாபத்தை காண முடியும். ஆப்சன், ப்யூச்சர் மற்றும் கம்மாடிட்டீஸ் போன்ற வர்த்தகத்தில் நீங்கள் லாபத்தை காண்பீர்கள். மேலும் அதிர்ஷ்ட சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவற்றிலும் உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் இந்த அனைத்து அதிர்ஷ்டங்களும் உங்களுக்கு பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2021 வரை) உள்ள காலகட்டங்களில் மட்டுமே பெற முடியும். இருப்பினும், நீங்கள் ரிஸ்க் எடுப்பதை தவிர்த்து விட வேண்டும். என்றால், சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் அதிர்ஷ்டத்தை குறைத்து விடுவார்.


ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை நீங்கள் அதிக இழப்புகளை சந்திப்பீர்கள். இந்த் காலகட்டத்தில் குரு உங்கள் வளர்ச்சிக்கு உதவி செய்வதை நிறுத்திக் கொள்வார். நீண்ட கால முதலீடுகள் செய்பவர்களும் கூட இந்த காலகட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்படுவார்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தை விட்டு முற்றிலுமாக வெளியில் வந்து விடுவது நல்ல யோசனையாக இருக்கும். ஏனென்றால், நீங்கள் சூதாட்டத்திற்கு அடிமையாவீர்கள் மேலும் பணத்தையும் இழப்பீர்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நவம்பர் 2021 வாக்கில் உங்களுக்கு பெரும் அளவு நிதி இழப்புகள் ஏற்படலாம்.

Prev Topic

Next Topic