குரு பெயர்ச்சி (2021 - 2022) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

வேலை / உத்தியோகம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பல ஏமாற்றங்கள், தடைகள் மற்றும் அவமானங்களை உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு ஏற்படுத்தி இருப்பார்கள். மேலும் உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் உத்தியோகத்தையும் இழந்திருப்பீர்கள்.


குரு இப்போது உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயருவதால், உங்கள் அலுவலகத்தில் இருக்கும் அழுத்தம் மற்றும் பதற்றம் வரும் நாட்களில் குறையும். உங்களுக்கு சிறப்பான நிதி சன்மானங்கள் கிடைக்கும். உங்களால் உங்கள் அலுவலகத்தில் மீண்டும் உங்களுக்கான இடத்தை பெற முடியும். பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை) நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்யலாம். மேலும் நீங்கள் விரும்பிய இடத்திற்கு உங்களுக்கு இடமாற்றம், குடியேற்ற பலன்கள் போன்றவற்றை உங்கள் நிறுவனத்தில் இருந்து பெறுவீர்கள்.
அஷ்டம சனியின் தாக்கத்தை நீங்கள் ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் அதிகமாக உணருவீர்கள். அதிகரிக்கும் வேலை அழுத்தத்தால் நீங்கள் அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுவீர்கள். இதனால் உங்களுக்கு சரியான தூக்கம் இல்லாமல் போகும், இதனால் சக்தி குறைந்து உங்களுக்கு உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். பாகம் 2 மற்றும் 4 இல் அலுவலகத்தில் அரசியல் இருக்கும். உங்கள் பதவி உயர்வு தாமதமாகலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் நீங்கள் அலுவலகத்தில் உங்கள் முக்கியத்துவத்தை இழக்க நேரலாம். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு பாதிக்கப்படலாம்.
மொத்தத்தில் உங்களுக்கு நேரம் எப்போது சிறப்பாக இருக்கிறது என்று தெரிந்தது கொண்டு, அதற்கேற்ற வாறு நீங்கள் பாதுகாப்பாக செயல்பட முயற்சிக்கலாம்.

Prev Topic

Next Topic