குரு பெயர்ச்சி (2021 - 2022) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

கல்வி


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நீங்கள் நல்ல பலன்களை அதிகம் காணத் தொடங்குவீர்கள். பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை) நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். நீங்கள் நல்ல குறிக்கோளை நிர்ணயித்து, அதனை நோக்கி செயல்படத் தொடங்குவீர்கள். உங்களுக்கு இந்த காலகட்டத்தில் சிறந்த கல்லூரி மற்றும் பல்கலைகழகத்தில் சேர்க்கை கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கக் கூடிய புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். முதுநிலை பட்டம் /Ph.D படிக்கும் மாணவர்கள், தங்களது ஆய்வறிக்கை ஒப்புதல் பெற்று, பட்டப் படிப்பையும் முடிப்பார்கள்.


ஆனால் பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் (ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை மற்றும் செப்டம்பர்/அக்டோபர் 2021 வாக்கில் ஒரு மாத காலத்திற்கு) நீங்கள் அதிக பின்னடைவுகளை சந்திப்பீர்கள். நீங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பென்கள் பெற வேண்டும் என்றால், அதிக நேரம் செலவிட்டு, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் விளையாட்டில் இருந்தால், இது உங்களுக்கு ஒரு சவால் நிறைந்த காலமாக இருக்கும். உங்கள் கல்லூரி பேராசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்துடன் உங்களுக்கு அதிக பிரச்சனைகள் ஏற்படலாம்.

Prev Topic

Next Topic