குரு பெயர்ச்சி (2021 - 2022) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் கடந்த சில மாதங்கள் நீங்கள் அதிக பிரச்சனைகளை சந்தித்திருந்திருப்பீர்கள். குரு தற்போது உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்களுக்கு சிறப்பான நிவாரணத்தை தருவார். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக நீங்கள் சரி செய்வீர்கள். உங்களது மறைமுக எதிரிகளை நீங்கள் அடையாளம் கண்டறிந்து அவர்களை விட்டு விலகி சென்று விடுவீர்கள். உங்கள் மனைவி/கணவன் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற நேரம். சுப காரியங்கள் நடத்துவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் சமூக வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். ஆனால் இந்த அதிர்ஷ்டங்களை நீங்கள் பாகம் 1 மற்றும் 5இல் பெறுவீர்கள்.



நீங்கள் பாகம் 2 மற்றும் 4-ஐ அடைந்ததும், உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படத் தொடங்கும். உங்களுக்கு மறைமுக எதிரிகளால் சதிகள் ஏற்படலாம். உங்களுக்கு உங்கள் மனைவி/கணவன் மற்றும் உங்கள் குடும்பத்தினர்களுடன் சண்டைகள் மற்றும் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம். உங்கள் குழந்தைகள் புதிதாக தேவைகளை முன் வைத்து உங்களை ஆச்சரியப்படுத்துவார்கள். குடும்பத்தில் அதிகரிக்கும் பிரச்சனைகளால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படும். நீங்கள் எந்த முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்னரும், ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் செயல்பட வேண்டும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், சனி பகவான் விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை மீறி நடக்காமல் பார்த்துக் கொள்வார் என்பது தான்.

Prev Topic

Next Topic