![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | முதல் பாகம் |
ஏப்ரல் 05, 2021 முதல் ஜூன் 20, 2021 வரை நல்ல அதிர்ஷ்டம் (80 / 100)
குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு நல்ல நிலையில் ஏப்ரல் 5, 2021 அன்று பெயருகிறார். சனி பகவான் முன்பே நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றார். உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகளில் இருந்து நீங்கள் முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். சுப காரியங்கள் நடத்த இது சிறப்பான நேரம்.
உங்கள் உத்தியோக வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்கள் வெற்றிக்கு நல்ல உறுதுணையாக இருப்பார்கள். மேலும் அடுத்த நிலைக்கு உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்யலாம். உங்கள் நிதி நிலையில் இந்த பாகத்தில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். பங்குகள், போனஸ் மற்றும் சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
வெளிநாட்டிற்கு குடிபெயர இது நல்ல நேரம். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும். தொலைதூர பயணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். தொழிலதிபர்கள் புது ப்ரோஜெக்ட்டை எதிர்பார்க்கலாம். மேலும் உங்களுக்கு பண வரத்தும் அதிகரிக்கும். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். பங்கு சந்தை வர்த்தகம் இந்த பாகத்தில் உங்களுக்கு லாபம் தரக்கூடியதாக இருக்கும். நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகளும் செய்யலாம்.
Prev Topic
Next Topic