குரு பெயர்ச்சி (2021 - 2022) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

உடல் நலம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயருவதால் நீங்கள் மீண்டும் உங்கள் உடல் நலத்தை முற்றிலுமாக பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலத்தில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். உடற்பயிற்சி மற்றும் வெளிப்புற வேலைகள் செய்வதில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் உடலில் உள்ள கொழுப்பு சத்து மற்றும் சர்க்கரையின் அளவு குறைந்து சீரான அளவிற்கு வரும். அழகு குறித்த அறுவைசிகிச்சை செய்ய இது ஏற்ற நேரம்.


ஆனால் பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயரும் போது உங்களுக்கு சில உடல் உபாதைகள் ஏற்படலாம். உங்களுக்கு ஏற்படும் இந்த பிரச்சனைகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே. ஆனால் எந்த விதமான அறுவைசிகிச்சை செய்து கொள்ளவும் இது ஏற்ற நேரம் இல்லை. உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் சரியான உணவு முறையை பின்பற்றி, உடற் பயிற்சி செய்து உங்கள் உடல் நலத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

Prev Topic

Next Topic