குரு பெயர்ச்சி (2021 - 2022) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

காதல்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு ஒரு அற்புதமான செய்தியாகும். சனி பகவான் முன்பே நல்ல நிலையில் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். குரு மற்றும் சனி பகவானும் இணைந்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்கள். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்திற்கு நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரனை நீங்கள் கண்டறிவீர்கள். திருமணம் ஆன தம்பதியினர் குழந்தை பேறு பெரும் பாக்கியத்தைப் பெறுவார்கள். ஆனால் இந்த அனைத்து அதிர்ஷ்டங்களையும் நீங்கள் பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் பெறுவீர்கள்.



ஜூன் 20, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் குரு சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்படலாம். நீங்கள் எதை செய்தாலும், அதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை மீறி நடக்காது. திருமணம் ஆன தம்பதியினர்கள் சில சவால்களை தங்கள் உறவில் சந்திப்பார்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், இந்த காலகட்டத்தில் திருமண முயற்சியை தவிர்த்து விடுவது நல்லது.

Prev Topic

Next Topic