![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் – சிம்ம ராசி
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து கடந்த சில மாதங்கள் உங்கள் வளர்ச்சியை பாதித்திருந்திருப்பார். தற்போது குரு உங்கள் ராசியின் 7ஆம் வீடான களத்திற ஸ்தானத்திற்கு பெயருகிறார். சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு சிறப்பான ஜெயா யோகம் உண்டாகும்.
பாகம் 1, 3 மற்றும் 5 இல் நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை காண்பீர்கள். இந்த காலகட்டத்தை பயன்படுத்தி நீங்கள் சுப காரியங்கள் நடத்த முயற்சிக்கலாம், மேலும் முக்கிய முடிவுகளையும் எடுக்கலாம். நீங்கள் எதை செய்தாலும், அது உங்களுக்கு பெரும் அளவு வெற்றியைத் தரும். உங்கள் உத்தியோகத்தில் சிறப்பான வளர்ச்சி உண்டாகும். புது வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் வெளிநாட்டு பயணம் போன்ற நல்ல விடயங்கள் உங்களுக்கு நடக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் பாகம் 2 மற்றும் 4 இல் உங்களுக்கு சில தாமதங்கள் ஏற்படலாம். குரு மீண்டும் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயருவதால் உங்களுக்கு சிறு உடல் நல பிரச்சனைகளும், அலுவலகத்தில் அரசியலும், உறவுகளுடன் சில பின்னடைவுகளும் ஏற்படலாம். நீங்கள் பாகம் 2 மற்றும் 4 இல் கவனமாக இருந்தால், இந்த குரு பெயர்ச்சி காலம் உங்கள் வாழ்க்கையில் பல அற்புதங்களை உண்டாக்கும். நீங்கள் மூச்சு பயிற்சி செய்து விஷ்ணு சஹாசர நாமம் கேட்டு உங்கள் நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic