![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | மூன்றாம் பாகம் |
செப்டம்பர் 15, 2021 முதல் அக்டோபர் 18, 2021 வரை கலவையான பலன்கள் (65 / 100)
குரு மீண்டும் மகர ராசிக்கு பெயர்ந்து சனி பகவானோடு இணைத்து சஞ்சரிப்பார். இந்த பாகத்தில் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும், ஆனால் நல்ல பலன்கள் அதிகமாகவே இருக்கும். நீங்கள் மீண்டும் உங்கள் ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள். உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் இலகுவாகும். உங்களுக்கு பிரச்சனையாக இருந்த ஊழியர்கள் அல்லது மேலாளர் விடுப்பில் சென்று விடுவார்கள். இதனால் உங்களுக்கு பெரும் அளவு நிவாரணம் கிடைக்கும்.
உங்கள் மனைவி/கணவன் உங்கள் தரப்பு கருத்தை புரிந்து கொள்வார். உங்கள் குழந்தைகள் தங்கள் தவறுகளை உணரத் தொடங்குவார்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருக்கின்றது என்றால் நீங்கள் சுப காரியங்கள் நடத்த முயற்சிக்கலாம். அப்படி இல்லை என்றால், நவம்பர் 2021 வரை காத்திருப்பது நல்லது.
உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். இருப்பினும், முடிந்த வரை பணம் கடன் வாங்குவது மற்றும் கடன் கொடுப்பது போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது. பங்கு சந்தையில் நீங்கள் பங்குகள் வைத்திருந்தாள், அதன் விலையில் மீண்டும் நல்ல மாற்றம் ஏற்படும்,. ஆனால் புதிதாக பங்கு சந்தை வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்வது நல்ல யோசனையாக இருக்காது.
Prev Topic
Next Topic