குரு பெயர்ச்சி (2021 - 2022) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021


பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பங்கு சந்தை முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். உங்களால் பங்கு சந்தை வர்த்தகத்தில் நல்ல லாபத்தை காண முடியும். ஆப்சன், ப்யூச்சர், மற்றும் கம்மாடிட்டீஸ் போன்ற வர்த்தகத்தில் நீங்கள் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். மேலும் சூதாட்டம், மற்றும் அதிர்ஷ்ட சீட்டு போன்றவற்றில் நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால், இந்த அதிர்ஷ்டங்களை நீங்கள் பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை) உள்ள காலகட்டத்தில் மட்டுமே பெற முடியும்.


ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம், ஆப்சன் மற்றும் நாள் வர்த்தகத்தை தவிர்த்து விடுவது நல்லது. ஆனால், பங்குகளில் நீங்கள் முதலீடுகள் செய்யலாம். சனி பகவான் மற்றும் குரு ஆகிய இரண்டு கிரந்கங்களும் நல்ல சாதகமான நிலையில் சஞ்சரிப்பது ஒரு அரிதான நிலையாகும். ஆனால், அப்படி நடந்தால், அந்த காலகட்டத்தில் நீங்கள் பணக்காரராகவும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு பண மழை பொழியும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13,. 2022 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் கோட்டீஸ்வரராகவும் வாய்ப்பு உள்ளது.

ஏப்ரல் 13, 2022க்கு முன் இருக்கும் காலகட்டத்திற்குள் உங்களுக்கு இருக்கும் நல்ல நேரத்தை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாகி விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். அடுத்து வரவிருக்கும் குரு பெயர்ச்சி, மே 2022 முதல் ஏப்ரல் 2023 வரை உங்களுக்கு மிகவும் மோசமானதாக இருக்கலாம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

Prev Topic

Next Topic