![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
தற்சமயம் நீங்கள் அதிக இழப்புகளை உங்கள் தொழிலில் சந்தித்திருப்பீர்கள். இது குறிப்பாக குரு மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீடான அர்தஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்ததால் ஏற்பட்டது. தற்போது குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை உங்கள் நிதி நிலையில் ஏற்படுத்துவார். உங்களுக்கு வரும் நாட்களில் தொழிலில் பெரும் அளவு வெற்றி ஏற்படும்.
ஆனால் இந்த குரு பெர்யற்சி காலம் முழுவதும் நீங்கள் அர்தஷ்டம சனி காலத்தில் இருக்கின்றீர்கள் என்பதை நிலைவில் கொள்ள வேண்டும். உங்கள் முன்னேற்றத்தின் வேகமும், வளர்ச்சியின் அளவும் உங்கள் பிறந்த சாதகத்தை சார்ந்தே உள்ளது. உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். உங்களால் பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை) இருக்கும் காலகட்டத்தில் உங்கள் நிதி தேவைகளை எளிதாக சமாளித்து விட முடியும். உங்கள் போட்டியாளர்களால் உங்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை நீங்கள் சமாளித்து விடுவீர்கள். சுயதொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் சிறப்பாக செயல்படுவார்கள்.
ஆனால் நீங்கள் பல சிக்கல்களையும், ஏமாற்றங்களையும் ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை இருக்கும் காலகட்டத்தில் சந்திப்பீர்கள். உங்கள் பண வரத்து பாதிக்கப்படலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிலும், ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும் சஞ்சரித்து அதிக போட்டிகளை உங்கள் தொழிலில் உண்டாக்குவார்கள். மேலும் நீங்கள் உங்கள் போட்டியாளர்கள் மற்றும் மறைமுக எதிரிகள் உங்களுக்கு எதிராக செய்யும் சதிகளால் நல்ல ப்ரோஜெக்ட்டை நீங்கள் இழக்க நேரலாம். உங்கள் தொழிலை விரிவுபடுத்த முயற்சிப்பது நல்ல யோசனையாக இந்த காலகட்டத்தில் இருக்காது. இந்த பாக காலகட்டத்தில் உங்கள் நிர்வாக செலவுகளை குறைக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு உங்கள் எதிரிகளிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பை பெறுங்கள்.
Prev Topic
Next Topic