![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கல்வி |
கல்வி
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இந்த குருபெயர்ச்சி காலம் முழுவதும் அனேக காலங்களில் நீங்கள் நல்ல பலன்களை காண்பீர்கள். உங்கள் படிப்பில் பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை ) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை) சிறப்பாக செயல்படுவீர்கள். ஒரு தெளிவான குறிக்கோளை நிர்ணயித்து அதனை நோக்கி செயல்படத் தொடங்குவீர்கள். உங்களுக்கு சிறந்த கல்லூரி மற்றும் பல்கலைகழகத்தில் இந்த காலகட்டத்தில் சேர்க்கை கிடைக்கும். உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார்கள். முதுநிலை பட்டம் மற்றும் Ph.D மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கையை முடித்து, பட்டத்தையும் பெறுவார்கள்.
ஆனால், பாகம் 2 மற்றும் 4 இல் (ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை மற்றும் செப்டம்பர் / அக்டோபர் 2021 வாக்கில் ஒரு மாத காலம்) அதிக பின்னடைவுகளை நீங்கள் சந்திக்க நேரலாம். நீங்கள் பரிச்சையில் அதிக மதிப்பென்கள் பெற வேண்டும் என்றால், அதிக நேரம் செலவிட்டு, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் விளையாட்டில் இருந்தால், உங்களுக்கு இது ஒரு சவால் நிறைந்த காலமாக இருக்கும். உங்கள் கல்லூரி பேராசிரியர் மற்றும் பள்ளி நிறுவனத்தினருடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம்.
Prev Topic
Next Topic