![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) குடும்பம் மற்றும் உறவுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 4ஆம் வீடான அர்தஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்ததால் நீங்கள் கடந்த சமீப நாட்களில் மோசமான காலத்தை சந்தித்திருந்திருப்பீர்கள். தற்போது குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க பெரும் அளவு உதவி செய்வார். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்பார்கள். உங்கள் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரையிலான (பாகம் 1) மற்றும் நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை (பாகம் 5) காலகட்டத்தில் சுப காரியங்கள் நடத்துவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2.௦, 2021 வரையிலான காலகட்டத்தில் தேவையற்ற சண்டைகள் மற்றும் வாக்குவாதங்களை உண்டாக்கி உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். பாகம் 4 இல் அக்டோபர் 18, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை உங்கள் மீது எந்த தப்பும் இல்லை என்றாலும், உங்களுக்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் தற்காலிகமாக பிரியவும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் எப்போது உங்களுக்கு நேரம் நன்றாக உள்ளது என்பதை தெரிந்து கொண்டு பாதுகாப்பாக செயல்பட வேண்டும்.
Prev Topic
Next Topic