குரு பெயர்ச்சி (2021 - 2022) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

நிதி / பணம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் நிதி வளர்ச்சியில் நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்குவார். அதிகரிக்கும் பண வரத்தால் உங்கள் செலவுகளை நீங்கள் சமாளிப்பீர்கள். உங்கள் கடன்களை நீங்கள் விரைவாக அடைத்து விடுவீர்கள். உங்கள் கிரெடிட் மதிப்பும் அதிகரித்துக் கொண்டே போகும். நீங்கள் குறைந்த வட்டி விகிதத்திற்கு தகுதி பெறுவீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். இந்த அணைத்து அதிர்ஷ்டங்களையும் நீங்கள் பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை) இருக்கும் காலகட்டத்தில் பெறுவீர்கள்.



ஆனால் பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் (ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 மற்றும் செப்டம்பர் / அக்டோபர் 2021 வாக்கில் ஒரு மாத காலத்திற்கு) அதிக செலவுகள் ஏற்படலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிலும், ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும் சஞ்சரித்து இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி வளர்ச்சியை பாதிப்பார்கள். உங்கள் நிதி தேவைகளை சந்திக்க நீங்கள் பணம் கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படலாம். உங்கள் கிரெடிட் மதிப்பு குறையலாம். உங்கள் வங்கிக் கடன் தாமதமாகலாம், அல்லது அதிக வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெறலாம். மொத்தத்தில் உங்களுக்கு எப்போது நேரம் சிறப்பாக உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டு பாதுகாப்பாக செயல்பட முயற்சிக்க வேண்டும்.

Prev Topic

Next Topic