![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | நான்காம் பாகம் |
அக்டோபர் 18, 2021 முதல் நவம்பர் 20, 2021 வரை சொத்துக்கள் குறித்த பிரச்சணைகள் மற்றும் அலுவலக அரசியல் (30 / 100)
குரு மற்றும் சனி பகவான் இணைந்து அர்தஷ்டம ஸ்தானத்தில் உங்களுக்கு சாதகமற்ற நிலையில் சஞ்சரிக்கின்றனர். இந்த பாக காலகட்டம் 5 வாரங்களுக்கு மட்டுமே என்றாலு, இதன் தாக்கம் கடுமையாக இருக்கும். மேலும் உங்கள் பிறந்த சாதகங்களுக்கு ஏற்றவாறு மாறுபடலாம். உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிதாக பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். நீங்கள் திட்டமிட்டிருந்த சுப காரியங்கள் தள்ளிப்போடப்படலாம்.
உங்கள் அலுவலகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். அலுவலகத்தில் அதிகரிக்கும் அரசியலால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படலாம். அக்டோபர் 2021 மாதத்தில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் பொறுமையாக இருந்து, இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும். தொழிலதிபர்கள் நிதி இழப்புகளை சந்திப்பார்கள். உங்கள் பங்குதாரருடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் நிதி நிலை மோசமாக பாதிக்கப்படலாம். பங்கு சந்தை வர்த்தகத்தை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic