![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2021 – 2022 குரு பெயர்ச்சி பலன்கள் – துலாம் ராசி
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து கடந்த சில மாதங்கள் உங்கள் வாழ்க்கையை மிகவும் மோசமாக்கி இருந்திருப்பார்கள். தற்போது குரு உங்கள் ஜென்ம ராசியை 7 ஆண்டுகளுக்கு பிறகு பூர்வ புண்ய ஸ்தானத்தில் இருந்து பார்வை இடுகிறார். இது உங்களுக்கு ஒரு சிறப்பான செய்தியாகும். பெரிய அளவிலான அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்க உள்ளது. அர்தஷ்டம சனியில் இருந்து உங்களுக்கு பெரும் அளவு நிவாரணம் கிடைக்கும்.
உங்கள் மனோ பலத்தை நீங்கள் மீண்டும் பெறுவீர்கள். குறிப்பாக பாகம் 1 மற்றும் பாகம் 5இல் நீங்கள் சுப காரியங்கள் நடத்துவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிலுவையில் இருக்கும் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெரும்.
இருப்பினும், குரு முன்னும் பின்னுமாக பெயருவதால் உங்கள் அதிர்ஷ்டம் குறிப்பாக பாகம் 2 மற்றும் பாகம் 4 இல் பாதிக்கப்படும். நீங்கள் கவனமாக இல்லை என்றால், ஜூன் 2௦, 2021 முதல் செப்டம்பர் 15, 2021 வரை மற்றும் அக்டோபர் 18, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை வரையிலான காலகட்டத்தில் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். சொத்துக்கள் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படும். நவம்பர் 2௦, 2021 க்குமேல் நீங்கள் உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளில் இருந்து வெளி வந்து விடுவீர்கள்.
மொத்தத்தில், உங்களுக்கு நேரம் எப்போது சிறப்பாக உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொண்டு பாதுகாப்பாக செயல்பட முயற்சிக்க வேண்டும். மூச்சு பயிற்சி செய்து, விஷ்ணு சஹாசர நாமம் கேட்டு உங்கள் நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic