![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) வேலை / உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
குரு, சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 4ஆம் வீடான அர்தஷ்டமா ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு ஏமாற்றங்கள், தடைகள் மற்றும் அவமானங்களை உங்கள் அலுவலகத்தில் ஏற்படுத்தி இருந்திருப்பார்கள். மேலும் உங்கள் மகா தசை பலவீனமாக இருந்திருந்தால், நீங்கள் உங்கள் உத்தியோகத்தையும் இழந்திருப்பீர்கள்.
தற்போது, குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் வேலை பளு மற்றும் பதற்றத்தை வரும் நாட்களில் குறைக்க உதவுவார். அலுவலகத்தில் நீங்கள் நல்ல நிலையை மீண்டும் பெறுவீர்கள். பாகம் 5 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை) நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயற்சிக்கலாம். நீங்கள் விரும்பிய இடத்திற்கு உங்களுக்கு இடமாற்றம், குடியேற்ற பலன்கள் போன்ற பலன்களை உங்கள் நிறுவனத்தில் இருந்து பெறுவீர்கள்.
அர்தஷ்டமா சனியால் ஜூன் 2., 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை நீங்கள் அதிக பாதிப்புகளை சந்திக்க நேரலாம். உங்களுக்கு வேலை பளு அதிகரிக்கலாம். அதிகரிக்கும் வேலை பளுவால் நீங்கள் அதிக நேரம் அலுவலகத்தில் வேலை பார்க்க வேண்டிய தேவை ஏற்படலாம். இதனால் தூக்கம் குறைந்து, உங்கள் சக்த்தியின் அளவும் குறைந்து உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம். பாகம் 2 மற்றும் 4 இல் அலுவலகத்தில் அரசியல் உண்டாகலாம். மேலும் உங்களுக்கு கிடைக்கவிருக்கும் பதவி உயர்வும் தாமதமாகலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் பாகம் 2 மற்றும் 4 இல் உங்கள் முக்கியத்துவத்தை அலுவலகத்தில் இழக்க நேரலாம். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு மிக மோசமாக பாதிக்கப்படலாம்.
மொத்தத்தில் உங்களுக்கு எப்போது நேரம் சிறப்பாக் இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ற வாறு பாதுகாப்பாக செயல்பட வேண்டும்.
Prev Topic
Next Topic