குரு பெயர்ச்சி (2021 - 2022) தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், தொழிலதிபர்கள் அடுத்த 12 மாதங்களுக்கு நல்ல பலனைப் பெறுவார்கள். குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து பயணம் மற்றும் பிற செலவுகளை அதிகரிப்பார். ஆனால் உங்களுக்கு வளர்ச்சி ஏற்படுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு மறைமுக எதிரிகள் இருக்க மாட்டார்கள். உங்களால் சனி பகவான் மற்றும் ராகுவின் பலத்தால் வெற்றிப் பெற முடியும். உங்கள் போட்டியாளர்களால் உங்களுக்கு ஈடு கொடுக்க முடியாது. உங்கள் எதிரிகள் உங்கள் முன் சரணடைவார்கள். குரு உங்கள் அதிர்ஷ்டத்தை அக்டோபர் 18, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை பல மடங்கு அதிகரிப்பார். மேலும் இந்த காலகட்டத்தில் நீங்கள் பணக்காரராகவும் ஆவீர்கள்.


வங்கி மற்றும் புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து உங்கள் தொழிலை விரிவுபடுத்த எந்த தாமதமும் மேலும் இல்லாமல் உங்களுக்கு விரைவாக போதிய நிதி உதவிகள் கிடைக்கும். உங்கள் வளர்ச்சி தொடர்ந்து இருக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஒரு முக்கியத்துவராகவும் ஆவீர்கள். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் தங்களுக்கு கிடைக்கும் புகழ் மற்றும் சன்மானன்களால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் தொடக்க நிலை தொழில் நல்ல முன்னேற்றம் பெற்று ஒரே இரவில் நீங்கள் பணக்காரராகவும் வாய்ப்பு உள்ளது.

Prev Topic

Next Topic