குரு பெயர்ச்சி (2021 - 2022) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

அக்டோபர் 18, 2021 முதல் நவம்பர் 20, 2021 பொற்காலம் (100 / 100)


சிறப்பான செய்தி. இது உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்குவார்கள். நீங்கள் கடந்த பாகத்தில் செய்த கடுமையான உழைப்பிற்கு இப்போது நல்ல பலன் கிடைக்கும். உங்கள் உடல் நலம் சீராக இருக்கும், மேலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
உங்கள் வளர்சிக்கும், வெற்றிக்கும் உங்கள் குடும்பத்தினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். சமுதாயத்தில் உங்களுக்கு நல்ல பெயரும், புகழும் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


அலுவலகத்தில் நீங்கள் நல்ல பாராட்டுகளைப் பெறுவீர்கள். அடுத்த நிலைக்கு நல்ல சம்பள உயர்வோடு பதவி உயர்வையும் பெறுவீர்கள். இந்த பாகத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும். தொழிலதிபர்கள் சிறப்பான லாபத்தை பெறுவார்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். பங்கு சந்தை வர்த்தகத்தில் நீங்கள் விண்ணைத் தொடும் லாபத்தை பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் புதிய வீடு வாங்கி குடி பெயர இது சிறப்பான நேரம்.


Prev Topic

Next Topic