![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | உடல் நலம் |
உடல் நலம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
குரு உங்கள் ராசியின் 12அம வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள். ராகு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிலும், சனி பகவான் 11ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருவார்கள். எந்த விதமான உடல் நல பிரச்சனைகளாக இருந்தாலும், அது விரைவில் குணமடைந்து விடும். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். நீங்கள் நல்ல கவரும் சக்தியை பெறுவீர்கள்.
உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் மூச்சு பயிற்சி செய்து நேர்மறை சக்திகளை விரைவாக பெறுவீர்கள். ஆனால், ஜூன் 2௦, 2021 முதல் அக்டோபர் 18, 2021 வரை (பாகம் 2 மற்றும் 3) உள்ள காலகட்டத்தில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். ஆனால், அத்தகைய செலவுகளை உங்களால் சமாளித்து விட முடியும், அல்லது மருத்துவ காப்பீடு மூலம் ஈடு செய்து விடுவீர்கள். சுதர்சன மகா மந்திரம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.
Prev Topic
Next Topic