![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | காதல் |
காதல்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
அணைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஜூன் 2௦, 2021 முதல் அக்டோபர் 8, 2021 வரையிலான காலகட்டங்களில் உங்களுக்குள் சிறிய வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், இந்த குரு பெயர்ச்சி காலத்தில் அது சில நாட்களுக்கு மட்டுமே ஒரு குறுகிய காலம் இருக்கும். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிப்பார்கள். உங்கள் காதல் வாழ்க்கைக்கு இது ஒரு பொற்காலமாக இருக்கும். உங்களது நீண்ட கால கனவுகள் நிறைவேறும். நீங்கள் நடுத்தர வயதினராக இருந்தால், மேலும் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரன் கிடைக்கும்.
அக்டோபர் / நவம்பர் 2021 வாக்கில் நீங்கள் காதல் வயப்பட நேரலாம். உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை கண்டறிந்து நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்கள். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியதோடு இருப்பார்கள். இயற்கையாகவே குழந்தை பேறு பெரும் பாக்கியம் கிடைக்கும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் எந்த பிரச்சனைகளும் இருக்காது. IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சைகள் உங்களுக்கு நேர்மறை பலன்களைத் தரும். இது ஒரு பொற்காலம் என்பதால், இத்தகைய வாய்ப்பு 1௦ ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் என்பதால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நல்ல நிலையில் செட்டிலாகி விட முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic