குரு பெயர்ச்சி (2021 - 2022) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

கண்ணோட்டம்


2021 - 2022 குரு பெயர்ச்சி பலன்கள் – மீன ராசி
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து கடந்த சமீப காலத்தில் உங்களுக்கு பண மழையை பொழிந்திருப்பார். ராகு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிலும், கேது 9ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு அடுத்த 12 மாதங்களுக்கு தொடர்ந்து நல்ல பலனைத் தருவார்கள். சனி பகவான் உங்கள் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல அதிர்ஷ்டங்களை தருவர்.
குரு உங்கள் ராசியின் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்திற்கு பெயருகிறார். இந்த சஞ்சாரத்தால் உங்களுக்கு சுப விரிய செலவுகள் அதிகரிக்கும். அதிர்ஷ்டவசமாக, குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படாது. நீங்கள் தொடர்ந்து இந்த குரு பெயர்ச்சி காலத்திலும் நல்ல ஆண்டாக உங்களுக்கு இருக்கும். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


நீங்கள் நீண்ட கால குறிக்கோள்களை நிர்ணயித்து அடுத்த 12 மாதங்களுக்கு அதை செயல்படுத்த முயற்சிக்கலாம். நீங்கள் எதை செய்தாலும், அதில் நல்ல வெற்றியை காண்பீர்கள். சுப காரியங்கள் நடத்த இது நல்ல நேரம். உங்கள் நிதி நிலையில் வளர்ச்சி உண்டாவதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்ய சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.
குடும்பத் தேவைகள் அதிகரிப்பதால், ஜூன் 20, 2021 முதல் அக்டோபர் 18, 2021 வரை (பாகம் 2 மற்றும் 3) அதிக செலவுகள் ஏற்படலாம். ஆனால் உங்கள் செலவுகளை திடம்பட சமாளிக்கும் வகையில் உங்களுக்கு பண வரத்தும் போதிய அளவில் இருக்கும். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஒரு முகியஸ்த்தவர் அந்தஸ்த்தையும் பெரும் வாய்ப்பு உள்ளது.


Prev Topic

Next Topic