குரு பெயர்ச்சி (2021 - 2022) திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்



ஊடகத்துறையில் இருப்பவர்கள் அணைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் பொற்காலத்தை காண்பார்கள். உங்களுக்கு பல ஆண்டு ப்ராஜெக்ட் கிடைப்பதால் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் நீண்ட கால திட்டங்களை வகுத்து, தங்கள் படத்தை வெளியிடுவார்கள். நீங்கள் உங்கள் படத்தை வெளியிட்டால், அது பெரும் அளவு வெற்றிப் பெரும்.


நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பதால், மக்களும் மற்றும் ஊடகங்களும் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். உங்களுக்கு பெரிய படங்களில் இருந்து சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் ஊடகத் துறைக்கு புதிது என்றாலும், அக்டோபர் / நவம்பர் 2021 வாக்கில் நீங்கள் ஒரு பிரபலமாகும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு இந்த காலகட்டத்தில் சிறப்பான நிதி சன்மானங்கள் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் தேர்தலில் பெரும் வெற்றிப் பெறுவார்கள். நீங்கள் உங்கள் கட்சியில் தலைமைப் பொறுப்பை பெறுவீர்கள். வருமான வரி மற்றும் சட்ட பிரச்சனைகள் இருந்தால், அதில் இருந்து முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள்.


Prev Topic

Next Topic