![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | இரண்டாம் பாகம் |
ஜூன் 20, 2021 முதல் செப்டம்பர் 15, 2021 வரை பின்னடைவுகள் (50 / 100)
குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் வக்கிர கதி அடைகிறார். சனி பகவானும் வக்கிர கதி அடைகிறார். ஆனால் ராகு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சில உதவிகளை செய்வார். உங்கள் உடல் நலம் இந்த பாக காலகட்டத்தில் சற்று பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும், ஆனால், அதனை நீங்கள் மருத்துவ காப்பீடு மூலம் ஈடு செய்து விடுவீர்கள்.
இந்த பாக காலகட்டத்தில் சுப காரியங்கள் நடத்துவதை தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் குடும்ப சூழலில் சில பிரச்சனைகள் எட்டிப்பார்க்கலாம். அலுவலகத்திலும் சில அரசியல் ஏற்படலாம். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுவது நல்லது. அலுவலகத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அது உங்களுக்கு சாதகமாக இல்லாமல் போகலாம். தொழிலதிபர்கள் இந்த பாக காலகட்டத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. நிலுவையில் இருக்கும் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் பெரும் விண்ணப்பம் தேக்கம் அடையலாம். உங்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால், உங்கள் சேமிப்பு பாதிக்கப்படலாம். யாருக்கும் முடிந்த வரை பணம் கடன் தருவதையோ, அல்லது கடன் வாங்குவதையோ தவிர்த்து விடுவது நல்லது. பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தலாம். ரியல் எஸ்ட்டே பரிவர்த்தனைகளை இந்த பாக காலகட்டத்தில் தவிர்த்து விடுவது நல்லது.
Prev Topic
Next Topic