குரு பெயர்ச்சி (2021 - 2022) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

கல்வி



Reference:
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021


பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022


இந்த குரு பெயர்ச்சி காலத்தில் அனேக நேரத்தில் நீங்கள் நல்ல பலனை காண்பீர்கள். உங்கள் படிப்பில் பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை) சிறப்பாக செயல்படுவீர்கள். நீங்கள் தெளிவான குறிக்கோளை நிர்ணயித்து அதனை நோக்கி செயல்படத் தொடங்குவீர்கள். உங்களுக்கு எளிதாக இந்த காலகட்டத்தில் நல்ல கல்லூரி மற்றும் பல்கலைகழகத்தில் சேர்க்கை கிடைக்கும். உங்களுக்கு புதிதாக கிடைக்கும் நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். நீங்கள் முதுநிலை பட்டம் / Ph.D படிக்கும் மாணவராக இருந்தால், உங்கள் ஆய்வறிக்கை ஒப்புதல் பெற்று நீங்கள் பட்டமும் பெறுவீர்கள்.

ஆனால் பாகம் 2 மற்றும் 4இல் (ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை மற்றும் செப்டம்பர்/ அக்டோபர் 2021 வாக்கில் ஒரு மாத காலம்) உங்களுக்கு அதிக பின்னடைவுகள் ஏற்படலாம். நீங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பென்கள் பெற அதிக நேரம் செலவு செயுது, படிப்பில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். நீங்கள் விளையாட்டில் இருந்தால் சில சவாலான நேரத்தை சந்திக்க நேரலாம். உங்களுக்கு உங்கள் கல்லூரி பேராசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்துடன் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.

Prev Topic

Next Topic